சந்தர்ப்ப சூழ் நிலைகளை பயன் படுத்தி லாபம் ஈட்டும் முதலாளிகளுக்கு மத்தியில் தன்னால் முடிந்த சமூக சேவையை செய்யும் இவர் போற்றத்தக்கவர்.
திருகோணமலை N.C.வீதியில் அமைந்திருக்கும் மொடர்ன் டைலர்ஸ் உரிமையாளர் முகமட் முஜீப் அவர்கள் இலவசமாக முகமூடி (Mask) தைத்து விநியோகம் செய்து வருகின்றார். இவரை தொடர்பு கொன்டு கேட்ட போது.. கொடூர நோயான கொரோனாவில் இருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பு பெற வேண்டும் என்றும் ஏழைகள் மாஸ்க் கஷ்டப்படுவார்கள் அவர்களுக்காகவும் இந்த இலவச மாஸ்க்களை விநியோகம் செய்தேன் என்றார். “காலத்தால் செய்த உதவி சிரிதெனினும் ஞாலத்தின் மானப்பெரிது”எனும் வள்ளுவர் வாக்கின்க்கமைய காலம் அறிந்து இந்த சமூக சேவையை செய்யும் இவர் போற்றப்பக்கூடியவரே!!