இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் காவல்துறையினர் தங்களது உயிரைத் பணயம் வைத்து மக்களை பாதுகாத்து வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் காவல்துறையினருக்கு மக்கள் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சில காவல்துறையினர்களின் வேலைகள் மக்களை வெறுக்க வைக்கிறது.
இதே மாதிரி சம்பவம் ஒன்று கேரளா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. புனலூர் மாவட்டத்தில் 64 வயதுடைய தனது தந்தையை காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிபூரண குணமடைந்தார். இந்த செய்தியை மகனுக்கு தெரியப்படுத்திய பின்னர் மகன் தந்தையை கூட்டிச் செல்வதற்காக வேண்டி முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.
ஆனால் பாதையில் நின்ற காவல்துறையினர் அவரை முச்சக்கர வண்டியில் போவதற்கு அனுமதிக்கவில்லை. ஆனாலும் மகன் வைத்தியசாலைக்கு போவதற்கான முயற்சியை கைவிடவில்லை. முச்சக்கர வண்டியை பாதை ஓரத்தில் நிறுத்தி விட்டு நடந்து சென்று 64 வயதுடைய தந்தையை இடுப்பில் சுமந்து கொண்டு வந்தார்.