இலங்கை நுகேகொட பகுதியில் இணையதள மூலமாக நிதி மோசடி செய்த நைஜீரிய நபர் உட்பட 3 பேரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து நிதி மோசடிகளுக்காக பயன்படுத்தப்படும் 18 கணக்குப் புத்தகங்கள் மற்றும் 29 ATM கார்ட்கள் மற்றும் 12 கையடக்க தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கையில்: நைஜீரியா நபர்களின் மூலமாக இணையதள மோசடி சம்பவங்கள் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது, மேலும் இணைய முகவரிகளை ஹெக் (Hack) செய்வதன் மூலம் இவ்வாறான நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே மின்னஞ்சல் மூலமாக இணையத்தில் நிதி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.