ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் தீபம் ஜப்பான் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வழக்கமாக ஒலிம்பிக் தீபம் கொண்டு வரப்படும் போது அதை வரவேற்கும் விதமாக பிரமாண்டமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். கொரோனா காரணமாக அத்தகைய நிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. இதனால் எந்த விதமான ஆரவாரமின்றி தீபம் ஜப்பானுக்குள் நுழைந்தது. அதை டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி பெற்றுக் கொண்டார்.

Leave a Reply