இனி ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட மட்டோம் என அமெரிக்காவில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மற்றவர்களையும் கட்டாயப்படுத்துகின்றனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ என்ற பெயரில் இனி ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட வேண்டாம் என நூதன போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பெண்களுக்கு நடிகையும், பாடகியுமான பெட்டே மிட்லர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

செக்ஸ் போராட்டம் ஏன்?

கருக்கலைப்பு செய்வது குற்றம் என்றும் கருக்கலைப்பு செய்து கொள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதற்காக தடையும் இருந்து வருகிறது. மேற்கண்ட நாடுகளில் மருத்துவ காரணங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவை பெற்ற பின்னரே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் நடைமுறையில் இருந்து வரும் கருக்கலைப்பு சட்டவிரோதம் என்ற சட்டத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலும் அமுல்படுத்தியுள்ளனர்.

ஆண்களுடன் இனி செக்ஸ் இல்லை: அமெரிக்க பெண்கள் நூதன போராட்டம்!

 Digital News Team  September 6, 2021

இனி ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட வேண்டாம் என அமெரிக்காவில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ என்ற பெயரில் இனி ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட வேண்டாம் என நூதன போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பெண்களுக்கு நடிகையும், பாடகியுமான பெட்டே மிட்லர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

செக்ஸ் ஸ்டிரைக் ஏன்?

கருக்கலைப்பு செய்வது குற்றம் என்றும் கருக்கலைப்பு செய்து கொள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதற்காக தடையும் இருந்து வருகிறது. மேற்கண்ட நாடுகளில் மருத்துவ காரணங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவை பெற்ற பின்னரே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் நடைமுறையில் இருந்து வரும் கருக்கலைப்பு சட்டவிரோதம் என்ற சட்டத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலும் அமுல்படுத்தியுள்ளனர்.

டெக்ஸாஸ் மாநில புதிய கருக்கலைப்பு சட்டப்படி, கருவில் சிசுவின் இதயதுடிப்பு உணரப்பட்ட காலத்திற்கு பின்னர் கருக்கலைப்பு செய்ய அனுமதி கிடையாது. கருக்கலைப்பு செய்வதாக இருந்தால் அதற்கு முன்னரே செய்து கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதயத்துடிப்பை உணர 6 வாரங்கள் ஆகலாம். இந்த 6 வார காலகட்டத்திற்குள் தாங்கள் கருவுற்றிருக்கிறோம் என்பதே பெரும்பாலான பெண்களுக்கு தெரியாது. அப்படியிருக்கும் போது இவ்வளவு கடுமையான சட்ட நடைமுறை எங்களுக்கு ஒத்துவராது இது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பது பெண்களின் வாதம்.

சர்ச்சைக்குள்ளான இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பெண்கள் தரப்பில் சிலர் முறையிட்ட நிலையில், இதனை விசாரித்த நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் அரசின் முடிவில் தலையிட முடியாது என ஒதுங்கிக் கொண்டது. இதன் பின்னர் தாங்களாகவே போராட்டத்தில் குதித்துள்ளனர் பெண்கள். அந்த வகையில் பல இடங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாடகியும், நடிகையுமான பெட்டே மிட்லர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

டுவிட்டர் வாயிலாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கருக்கலைப்பு சட்டத்தை அரசு திருத்தும் வரையில் ஆண்களுடன் செக்ஸில் ஈடுபடாமல் செக்ஸ் ஸ்டிரைக்கில் பெண்கள் ஈடுபட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது துப்பாக்கிகள், பேச்சு, பணம் அல்லது போர் பற்றியது அல்ல. இது பெண்கள், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் உடலமைப்பு பற்றியது. பெண்கள் இனப்பெருக்க முடிவுகளை எடுப்பதில் முழு சுதந்திரம் கிடைக்கப்பெரும் வரை செக்ஸ் போராட்த்தில் ஈடுபடுவோம் என நடிகை பெட்டே மிட்லர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டம் ஏனைய மேற்க்தேய நாடுகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கலியுகத்தின் கடைசி காலம் என சில ஆண்மிக வாதிகள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.