அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த, ஜோ பைடன், மற்றும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் எதிர்வரும் 20ம் திகதி பதவி ஏற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி அமெரிக்க நாடாளுமன்றமான ‘கேப்பிடெல்’ நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் அதிபர் பதவி ஏற்பு விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

பதவி ஏற்பு நிகழ்வு தினத்தில் வாஷிங்டனில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 10,000 பேர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 5,000 வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரவழைக்கப்பட உள்ளனர்.

மேலும் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியை டொனால்டு டிரம்ப் புறக்கணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடந்தால் 1869க்கு பின் புதிய அதிபரை வரவேற்க தவறிய அதிபர் என்ற பெயரை டிரம்ப் பெறுவார்.

மேலும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரபல பாப் இசைக் கலைஞர் லேடி காகா அமெரிக்க தேசிய கீதத்தை பாட உள்ளார்.

Leave a Reply