அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 31,262 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3,407 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் கொரோனா வைரஸினால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 246,376 ஆக உயர்ந்துள்ளது.
இதில் நேற்று மாத்திரம் 3,168 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 218,988 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 733 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தற்போது 26,655 பேர்கள் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.