நேற்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் சிறைக்கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை, இதனால் சிறைக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
நிலமையை கட்டுப்படுத்த காவல்துறை மேற்கொண்ட முயற்சிகள் பயனலிக்காகத சந்தர்பத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. காயங்களுடன் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள்.