அரசினால் நிர்னயிக்கப்பட்ட விலைகளுக்கும் அதிகமாக உங்கள் பிரதேசங்களில் கடை உரிமையாளர்கள்,மற்றும் விஷேட அனுமதி பெற்று வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டால் உடனடியாக 1977 எனும் இலக்கத்திற்க்கு அழையுங்கள்.
நாட்டில் இடம்பெற்றிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் மக்களின் நலன் கருதி அரசினால் பருப்பு,டின்மீன்,முட்டை,போன்றவற்றின் விலை கீறைக்கப்பட்டாலும் சில கிராம புரங்களில் உள்ள கடைகளில் குறிப்பிட்ட விலைக்கு கடை உரிமையாளர்கள் தர மறுப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளதை அடுத்தே இந்த இலக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி சில காய்கறி,வியாபாரிகளும் அதிக விலைக்கு காய் கறிகளை விற்ப்பதாக முறைப்பாடுகள் அதிகம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன இவ்வாறானவர்களை மேலுள்ள இலக்க.திற்க்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடு செய்ய முடியும்.