அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகி அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் வீட்டிற்கு மீள அனுப்பப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அக்கரைப்பற்றை சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.
கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி இவர் சிகிச்சைக்காகா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இரண்டு கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மாதிரி அறிக்கைகள் வெளிவந்துள்ள இதில் இவருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் மேலும் ஆய்வுகள் திரும்பவும் மேற்கொள்ளப்பட்டு அவர் குணம் அடைந்து விட்டார் என்ற அடிப்படையில் வீடு செல்ல இன்று (25) மாலை அனுமதிக்கப்பட்டார்.