அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி பிரதேச கிளையின் மாதாந்தக் கூட்டம் 2021.08.01 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜம்இய்யாவின் அலுவலகத்தில் அதன் உப தலைவர் அஷ் ஷைக் AR.றியாழ் (இஹ்ஸானி) அவர்களின் தலைமையில் சூரா பாத்திஹாவுடன் ஆரம்பமானது.
இதன் போது தலைமை உரை நிகழ்த்திய உப தலைவர் ஜம்இய்யா என்பது குறிப்பிட்ட சிலரால் நடாத்தப்படுகின்ற ஒன்றல்ல, பிரதேச அனைத்து உலமாக்களின் சொத்தாகும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படும் போது சமூகத்திற்குத் தேவையான பல பணிகளை எம்மால் முன்னெடுக்க முடியுமாக உள்ளது இதனை கடந்த கால செயற்பாடுகளினூடாக நாம் கண்டுகொண்டோம் எனவும் இதற்கு பின்னாலும் இதை விடவும் சிறப்பாக எமது செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார். மேலும் கடந்த மாதங்களில் ஜம்இய்யாவினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றி சபையோருக்குக் தெளிவுபடுத்தியதோடு தனது உரையை நிறைவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து இக் கூட்டத்திற்கு புதிய உறுபினர்களும் வருகை தந்திருந்தமையால் அறிமுக நிகழ்வொன்று நடைபெற்றது,
இதனையடுத்து இம்மாதம் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் மற்றும் நிருவாகத் தெரிவு தொடர்பாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இறுதியாக எமது பிரதேச சபை தவிசாளரினால் உலமாக்களுக்கென வழங்கப்பட்ட அன்பளிப்பும் இதன் போது வழங்கப்பட்டது. அத்துடன் இக்கூட்டம் 11.30 மணிக்கு துஆவுடன் இனிதே முடிவடைந்தது.
தகவல் :
அஷ்ஷெய்ஹ் ALM.ஹிஷாம் (மீஸானி)
செயலாளர்
அ.இ.ஜ.உலமா,
குச்சவெளி கிளை.
2021.08.01