மாஸ்கோ: உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக உலக அளவில் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடின் இன்று காலை உக்ரைனுக்கு எதிராக போர் தொடுக்க போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். சரி இந்த போர் ஏன் நடக்கிறது.. இது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா.. சீனா இதில் என்ன செய்யும்.. அமெரிக்க அதிபர் பிடன் என்ன செய்வார் என்று ஒரு round பார்க்கலாம் வாருங்கள்!
இப்போது போர் தொடுக்கும்.. அப்போது போர் தொடுக்கும் என்று ரஷ்யாவை பற்று மேற்கு உலக நாடுகள் பயம் காட்டி வந்த நிலையில் தற்போது உண்மையிலேயே உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
military operation என்பதற்கு இணையான ரஷ்ய வார்த்தையை அவர் தனது பேச்சில் பயன்படுத்தி உள்ளார். கிழக்கு உக்ரைன் உள்ளே சென்று ராணுவம் தாக்குதல் நடத்தும் என்று. உக்ரைனில் ரஷ்யா ஆளுகைக்கு உண்டான பகுதியை உருவாக்க போவதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
அதாவது உக்ரைன் உள்ளே ரஷ்யா செல்லும், கிழக்கு உக்ரைனை ரஷ்யா கைப்பற்றும். அதன்பின் அந்த பகுதியை தனது ஆளுகைக்கு உட்பட்ட உக்ரைன் புரட்சியாளர்கள் ஆளும் பகுதியாக ரஷ்யா அறிவிக்கும். இதுதான் இப்போதைக்கு போர் நடப்பதற்கான நோக்கம். மீதி பாதி உக்ரைனையும் ரஷ்யா விரைவில் ஆக்கிரமிக்கும். ஆனால் போரின் முதல் பாதி கிழக்கு உக்ரைனை மையப்படுத்தியே இருக்கும் . உக்ரைன் மீது ரஷ்யா வான்வெளி தாக்குதல், ராணுவ தாக்குதல் நடத்த போகிறது.
மோதலுக்கு என்ன காரணம்?
இந்த மோதலுக்கு காரணம் சிம்பிள் விஷயம்.. நிலமே எங்கள் உரிமை! ஆம் உக்ரைனை யார் கட்டுப்படுத்துவது என்பதே இந்த மோதலுக்கு காரணம். உக்ரைனும், ரஷ்யாவும் வரலாறுபடி பங்காளிகள். எல்லோரும் சோவியத் யூனியனுக்கு கீழ் ஒன்றாக இருந்தனர். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. ஆனால் அப்போதில் இருந்து உக்ரனை எப்படியாவது தனது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யா முயன்று வருகிறது.
ரஷ்யா முயற்சி
முதலில் உக்ரைன் பிரதமர்களை கட்டுப்படுத்தி ரஷ்யா நிழல் ராஜ்ஜியம் நடத்தியது. ஆனால் அதன்பின் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தலைவர்களை உக்ரைன் மக்கள் தூக்கி வீசினார்கள். இதனால் உக்ரைன் மீது ஆயுத போர் நடத்தி அந்த நாட்டை கைப்பற்ற ரஷ்யா முயன்று வருகிறது. ஏற்கனவே 2014ல் உக்ரைனின் கிரிமியாவை கைப்பற்றிய ரஷ்யா அதை தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிரிமியா போலவே உக்ரைனின் மற்ற பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்ற முயன்று வருகிறது.
அமெரிக்கா அத்துமீறல்
சரி நல்லா இருக்கும் உக்ரைனை ஏன் ரஷ்யா கைப்பற்ற முயல்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இங்கே அமெரிக்கா மட்டும் சும்மா இல்லை. சோவியத் யூனியனில் இருந்த பல நாடுகளை அமெரிக்கா தனது நேட்டோ படையில் இணைத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா சேர்ந்து இப்படி நேட்டோ படைகளில் முன்னாள் சோவியத் நாடுகளை இணைத்து நேட்டோவை விரிவாக்கி உள்ளது. லத்திவியா. லித்துவானியா, ஈஸ்டானியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ஜார்ஜியா உள்ளிட்ட ரஷ்யாவிற்கு அருகே இருக்கும் எல்லைப்புற நாடுகள் எல்லாம் இப்போது நேட்டோ வசம்.
அமெரிக்கா திட்டம்
இரண்டாம் உலகப்போர் முடிந்து பல வருடம் ஆகிவிட்டது.. அமெரிக்கா – ரஷ்யா இடையிலான பனிப்போர் 1989லேயே முடிந்துவிட்டது. ஆனாலும் அமெரிக்காம் ஐரோப்பா இந்த நேட்டோ படையை கலைக்காமல் அதை விரிவாக்கி வருகிறது. அதோடு நேட்டோ படைகளை விரிவாக்கி அதை ரஷ்யா எல்லை வரை அமெரிக்கா கொண்டு சென்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைனையும் அமெரிக்கா நேட்டோவில் சேர்க்க திட்டமிட்டு வந்தது. அப்படி நடந்தால் அவ்வளவுதான் ரஷ்யாவை பூகோள ரீதியாக அமெரிக்காவின் நேட்டோ.
ரஷ்யா பொங்கி எழுந்து போர்
இது ரஷ்யாவை நிர்மூலமாக்கும். இதை ரஷ்யா பொறுக்க முடியாமல்தான் தொடக்கத்தில் வார்னிங் கொடுத்தது. ஆனால் அமெரிக்கா நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்தவில்லை. விளைவு தற்போது ரஷ்யா உக்ரைன் உள்ளே புகுந்துள்ளது… ஆனால் இது உக்ரைனோடு முடியாது. நேட்டோவில் இருக்கும் மற்ற சோவியத் நாடுகள், மற்ற ரஷ்யாவின் அண்டை நாடுகளை இதே போரின் மூலம் ரஷ்யா கைப்பற்றும் அபாயம் உள்ளது. அதாவது இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் நாடுகளை கைப்பற்ற துடித்தது போல இது மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் அபாயம் உண்டாகி உள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவு யார்?
இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. கம்யூனிச கொள்கைக்கு எதிரான நாடுகள் எல்லாம் உக்ரைன் ஆதரவுதான். ஜப்பான் உக்ரைன் ஆதரவு. நேட்டோ படையில் உள்ள நாடுகள் எல்லாம் உக்ரைன் ஆதரவு. இதனால்தான் உக்ரைன் மீது போர் தொடுக்க கூடாது என்று ரஷ்யாவை நேட்டோ எச்சரித்தது. இங்கிலாந்து உக்ரைன் ஆதரவு. நேட்டோவில் உள்ள, இல்லாத ஐரோப்பா நாடுகளும் உக்ரைன் ஆதரவுதான். உக்ரைன்தான் இந்த போரில் பெரிய தலைக்கட்டு.
ரஷ்யாவிற்கு ஆதரவு யார்?
இன்னொரு பக்கம் ரஷ்யாவிற்கு வடகொரியா நேரடி ஆதரவு தரும். சீனா இதில் ஏற்கனவே ரஷ்யாவிற்கு ஆதர்வாக் பேசிவிட்டது. உக்ரைனை ரஷ்யாவுடன் சேர்க்க வேண்டும். அமெரிக்காவும் நேட்டோவும் அடக்கமாக இருக்க வேண்டும் என்று சீனா ஏற்கனவே எச்சரித்துவிட்டது. போர் பெரிய அளவில் போனால் அதில் சீனாவும் மூக்கை நுழைக்கும். இன்னொரு பக்கம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று ரஷ்யா சென்றார். இது ரஷ்யாவிற்கு பாகிஸ்தான் கொடுக்கும் மறைமுக ஆதரவாக பார்க்கப்படுகிறது.
போர் வருமா?
உக்ரைன் போர் உச்சம் அடைய இன்னும் 2-3 நாட்கள் ஆகும். அது பெரிதான பின் கண்டிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிடும். அதன்பின் முழுமையாக நேட்டோ படைகள் களமிறங்கும். ஏற்கனவே நேட்டோ படைகள் உக்ரைனை சுற்றியும் மற்ற நட்பு நாடுகளிலும் தயாராக இருக்கிறது. சீனாவும் தென் சீன கடல் எல்லையில் முறுக்கிக்கொண்டு இருக்கிறது. பல நாட்டு எல்லை பிரச்சனைகள் தீர்க்கும் விதமாக உக்ரைன் – ரஷ்யா போர் முழு 3ம் உலகப்போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது!
(By: one India news)