மனிதன் படைக்கப்பட்ட நாள் முதலே இந்த விமர்சனம் என்ற கொடிய நோயும் படைக்கப்பட்டது எனலாம். ஏனெனில் இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல ஒன்றை ஒன்று போட்டி போடுகின்றன. காரணம் என்னவெனில் அல்லாஹ் மலக்குகளையும், மனிதனையும் படைத்து விட்டு தனக்கு சிரம் பணியுமாறு கட்டளையிட்ட சந்தர்ப்பத்தில் எல்லோரும் சிரம் பணிய விதண்டா வாதமாய் ஒருவன் மட்டும் மறுத்து விட்டான். அவன் தான் இப்லீஸ். ஏன் மறுத்தாய் என்று விசாரித்த போது நீ என்னை சுட்டெரிக்கும் நெருப்பினால் படைத்தாய் மனிதனையோ வெறும் களிமண்ணினால் படைத்தாய். அவனை விட நான் சிறந்தவன் என்றான். இதிலிருந்தே விமர்சனம் உருவாகிவிட்டது.

விமர்சனம்

👉 விமர்சனம் என்பது ஒரு மனிதனை உயர்த்தவும் செய்யும், தாழ்த்தவும் செய்யும். இதனால்தான் “உன்னால் முடியாது என பலர் கூறிய வார்த்தைகளே என்னை வெற்றியின்பால் தள்ளியது” என்றான் ஜாக்கி சான். இவரின் வெற்றிக்கு காரணமாய் அமைந்ததுவும் ஓர் விமர்சனம் தானே?

👉 நல்லது செய்யும் மனிதனை தாறுமாறாக விமர்சித்து அவனுடைய நல்ல பண்புகளையே மாற்றி விடுவதும், தவறே செய்யாத மனிதனை விமர்சிப்பதனால் ஒரு பாவியாக வழி வகுப்பதுவும் இந்த விமர்சனம் தானே?? இப்படிப்பட்ட இழிவான செயலால் நீங்கள் பெற்ற இலாபங்கள்தான் என்ன?

👉 “வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும்” என்ற பாடல் வரிகளுக்கு அமைய இந்த மனித குலம் வாழ விடாமல் விமர்சனம் என்ற கொடிய வாளைக் கையிலேந்தி போராடுகின்றனர்.

👉 விமர்சனத்தினால் ஏற்பட்ட நன்மைகளை விட தீமைகளே அதிகம் எனலாம். ஏனெனில் ஒற்றுமையாக இருக்கக்கூடிய இரு குழுக்களை வெவ்வேறாகப் பிரித்து விடுவது, சந்தோஷமாக வாழும் குடும்பத்தினர் மத்தியில் பிரச்சினையை உண்டுபண்ணுவது போன்ற வல்லமைகளெல்லாம் இந்த விமர்சனத்துக்குண்டு.

👉 விமர்சிப்பதால் ஒரு மனிதன் முன்னேறுவானாக இருந்தால் தாராளமாகவே விமர்சியுங்கள். அவனை அதாள பாதாளத்தில் தள்ளி விடுமாக இருந்தால் தயவு செய்து இந்த இழிவான விமர்சனத்தை நிறுத்துங்கள்.

👉 நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களுக்கும் நிச்சயம் இறைவனிடத்தில் விசாரணை உண்டு. அதில் வெற்றி பெற வேண்டுமானால் இவ்வாறான செயல்களை நிறுத்த வேண்டும்.

👉 யார் எம்மை விமர்சித்தாலும் நாம் நாமாக இருப்போம். “கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை. கல்தான் காணாமல் போகிறது. விமர்சனங்கள் கல்லாகவும் நாம் கடலாகவும் இருப்போம்.

நன்றி

By : Journalist MS

By Admin

Leave a Reply