குருணாகல் நகரின் பெரகும்பா வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் பீர் போத்தலால் தாக்கியதில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் வாழைப்பழத்தை வாங்க ஹோட்டலுக்கு வந்ததாகவும், ஒரு பழம் ரூ .30 கூறப்பட்டதால் கோபமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் ஊழியருடன் வாக்குவாதத்தைத் தொடர்ந்து கோபமடைந்த நபர் அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி , சில நிமிடங்களில் வெற்று பீர் போத்தலுடன் மீண்டும் வந்துள்ளார்.
சந்தேகநபர் பியர் போத்தலை உடைத்து, முதலில் ஹோட்டலின் உரிமையாளரையும், பின்னர் ஊழியரையும் குத்தியதாக பொலிசார் தெரிவித்தனர். ஆபத்தான நிிலையில் அவசர சிகிச்சை அளிிக்கப்பட்ட ஊளிிியர் சிகிச்சை பலனின்றி உயிரிலந்தார்.