இலங்கையில் சில வாரங்களாக காலநிலை மிக மோசமாக இருந்து வருகிறது.
இந்த காலநிலை இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.