கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேச கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்காளதேச கிரிக்கெட் அணி எதிர் வரும் 29 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்கேற்க அந்நாட்டுக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தது.
அதேபோல், ஏப்ரல் 5 ஆம் திகதி இரு அணிகளும் பங்கேற்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியும் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்துள்ளன.