ங்காளதேசத்தில் Corona கொரோனா சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உலக நாடுகளை மிரட்டி வரும் Corona Virus கொரோனா பங்களாதேஷ் நாட்டிலும் பரவி வருகிறது. கொரோனா நோயாளிகளின் சிகிச்சைகாக  தலைநகர் டாக்காவில்  குல்ஷான் சந்தை பகுதியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் உள்பட 5 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.இந்த  தீ விபத்துக்கான  காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Admin

Leave a Reply