இன்று மேற்கொள்ளப்பட்ட ரயில்வே பணிப் பகிஷ்கரிப்பு முற்றாக கைவிடப்பட்டுள்ளது.

அமைக்கப்பட்ட நேரசூசிக்கு அமைவாக இலங்கையின் ரயில் சேவைகள் இடம்பெறுவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மொன்டி ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ரயில்வே சாரதிகள் சங்கம் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் ஆகியன இந்த தொழிற்சங்க நடவடிக்கையினை ஆரம்பித்திருந்தன.

தமது கேரிக்கைக்கு தகுந்த பதில் கிடைக்காதவிடத்து, மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.

By Admin

Leave a Reply