நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகி கடந்த 17 மாதங்களில் 18 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மக்கள் படும் இன்னல்களை கருத்திற்கொள்ளாது, மக்களின் வரிப் பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி செய்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாதீட்டில் ஒதுக்கப்பட்ட தொகை போதாமையினால், மேலும் 200 மில்லியன் ரூபாயை அவர் ஒதுக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, இயற்கையாக உருவான ஒன்றல்ல.அது திறமையற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட நெருக்கடி என்றும், இது பொருளாதார பயங்கரவாதம் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் முட்டாள் தனமான கொள்கைகளால் நாட்டை அழித்து வருகிறது.

நட்பு வட்டார முதலாளித்துவத்தை பின்பற்றும் இந்த அரசாங்கம் மக்கள் சக்தியினால் விரட்டியடிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Leave a Reply