Donald Trump Warning For World War 3: மூன்றாம் உலகப் போரை நோக்கி அமெரிக்க அதிபர் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நாட்டை வழிநடத்துகிறாரா? கொந்தளிப்பில் அமெரிக்க அரசியல்! டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டுகள் உண்மையா?

Third World War : ஜோர்டானில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் பெரும் அரசியல் போர் வெடித்துள்ளது. ஜோ பிடன் மீது பழியை சுமத்திய டொனால்ட் டிரம்ப், மூன்றாம் உலகப் போரை நோக்கி அமெரிக்க அதிபர் நாட்டை வழிநடத்துவதாக குற்றம் சாட்டுகிறார். உள்நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தோல்விகளுடன் போராடுவதாக டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டுகிறார். மேலும், அதிகாரத்தின் மீதான தனது பிடியைத் தக்கவைக்க உலகப் போரை நோக்கி நாட்டை அவர் திருப்பலாம் என்று எதிர்கட்சி குற்றம் சாட்டுகிறது.

மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியங்கள்

ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் அமெரிக்க தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.  அமெரிக்கத் தளத்தின் மீது நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 40 பேர் காயமடைந்தனர். தாக்குதல்களுக்கு ஈரான் ஆதரவு போராளிக் குழுக்கள் தான் என்று அதிபர் ஜோ பிடென் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கர்களின் இறப்பு மற்றும் காயங்களுக்கு பொறுப்பானவர்களை,ஒருபோதும் சும்மா விடமுடியாது என்று அவர் சபதம் செய்துள்ளார்.

அமெரிக்கா மீதான இந்த வெட்கக்கேடான தாக்குதல் ஜோ பிடனின் பலவீனம் மற்றும் சரணடைதலின் மற்றொரு பயங்கரமான மற்றும் சோகமான விளைவு என்று டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொண்ட முன்னாள் அதிபர் டிரம்ப், தான் நாட்டின் அதிபராக இருந்திருந்தால் இந்த கொடிய தாக்குதல் ஒருபோதும் நடந்திருக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.

“இஸ்ரேல் மீதான ஈரானிய ஆதரவுடன் ஹமாஸ் தாக்குதல் நடந்திருக்காது, உக்ரைனில் போர் நடந்திருக்காது, இப்போது உலகம் முழுவதும் அமைதி நிலவும். ஆனால், தற்போது நாம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் இருக்கிறோம் என்று டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

குற்றச்சாட்டுகள் ‘ஆதாரமற்றவை’: ஈரான்  
ஜோர்டான்-சிரியா எல்லையில் உள்ள அமெரிக்க தளம் அருகே சமீபத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதல் மத்திய கிழக்கில் பதட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான், தனது நேரடித் தலையீட்டை மறுத்தாலும், அமெரிக்காவை இப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நோக்கில் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

By JF

Leave a Reply