முட்டைக்கோழி பண்ணை வளர்ப்பு

அறிமுகம்

இலங்கையில் முட்டைத் தேவைக்காக இரண்டு வகை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. ஒன்று வெள்ளை லேயர் கோழிகள். மற்றொன்று சிவப்பு லேயர் கோழிகள். நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

இவை பண்ணைக் கோழிகள் என அழைக்கப்படும். நாட்டுக்கோழிகளைப் போன்று அடை வைக்கவோ இயல்பாக கொக்கரிக்கவோ இவைகளால் இயலாது. முட்டைத்தேவைக்காகவும் இறைச்சி தேவைக்காகவும் மட்டுமே லேயர்கள் வளர்க்கப்படுகின்றன.

இலங்கையில் உலர் வலயப்பிரதேசங்களில் கூடுதலான பண்ணைகள் உள்ளன. வடக்கு, கிழக்கு, வட மத்திய, மேல மாகாணங்களில் அதிகளவிலான முட்டைக்கோழிப் பண்ணைகள் காணப்படுகின்றன.

முதலீடு

சாதாரணமாக 500 கோழிகளை குஞ்சிலிருந்து முட்டையிடும் பருவம் வரை வளர்க்க தீவினச் செலவுகள் மட்டும் கிட்டத்தட்ட 450,000-500,000 தேவைப்படுகின்றது.

முட்டையிட துவங்கும் ஒவ்வொரு நாளும் தீவனம் வழங்க வேண்டியிருக்கும்.

கொட்டகை அமைத்தல் செலவு

500 கோழிகளுக்குரிய பண்ணை அமைப்பானது ஒரு கோழிக்கு ஒரு சதுர அடி விகிதம் 500 சதுர அடிகளில் கொட்டகை அமைப்பை தயார் செய்ய வேண்டும்.

அகலம் 20 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். நீளம் தேவைக்கேற்ப அதிகரிக்கலாம்.

20 அடி அகலமும் 25 அடி நீளமும் கொண்ட ஒரு பண்ணை அமைப்பில் 500 சதுர அடிகள் காணப்படும். இப்பண்ணையை அமைக்க கிட்டத்தட்ட 250,000 செலவாகும்.

நீங்கள் எத்தனை கோழிகள் வளர்க்க திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை பொறுத்து முதலீடு மாறுபடும்.

500 கோழிகளுக்கு குறைவான எண்ணிக்கையில் வளர்க்கும் போது பெரியளவில் இலாபம் இருக்காது.

கோழித்தீவினம்

4 1/2 மாதங்களில் கோழிகள் முட்டையிட ஆரம்பிக்கும். சில கோழிகள் 5 மாதங்கள் கூட ஆகும்.

முட்டையிடும் ஒரு கோழிக்கு நாளொன்றுக்கு 100 கிராம் அளவில் தீவினம் பிரித்து வழங்கப்படுகின்றது. தீவினத்தின் விலையைப் பொறுத்து முட்டையிலிருந்து கிடைக்கும் இலாபம் தீர்மானிக்கப்படுகின்றது.

கம்பனி மூட்டைத் தீவினமான பிரிமா போன்ற சில உற்பத்திகள் கோழிகளுக்காக வழங்கப்படுகின்றன. சந்தையில் வெவ்வேறு தீவின வகைகளும் கிடைக்கின்றன. அவை விலைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படும்.

பெரிய பண்ணைகள் என்று வரும் போது நேரடியாக உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் பெற்றால் விலை குறைவாக கிடைக்கும். இடைத்தரகர்களிடம் தீவினங்களை வாங்காதீர்கள். சிறியளவில் வளர்ப்போர் இடைத்தரகர்களிடமே அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.

முட்டை வருமானம்

500 கோழிகளை வளர்ப்பதால் நாளொன்றுக்கு 90% முட்டைகளை பெறலாம். கிட்டத்தட்ட 450 முட்டைகளை பெறலாம். வெள்ளை முட்டைகளை விட சிவப்பு முட்டைகள் 1/- விலை வித்தியாசம் காணப்படும்.

தினமும் கோழிகளுக்கு வழங்கும் தீவினச் செலவைக் கழித்தால் நிகர இலாபமாக சராசரியாக 4500/- – 5000/- தொடர்ச்சியான இலாபமாக இருக்கும். சில வேளை சிறு தொகையாக கூடலாம். குறையலாம்.

பெரியளவில் முதலீடு செய்து 2000,4000 என கோழிகளை வளர்க்கின்ற போது நாளாந்தம் கணிசமான அளவில் இலாபம் கிடைக்கும்.

பண்ணை அமைப்பு முறை

முட்டைக் கோழிப்பண்ணை அமைப்பானது கோழிகள் சுற்றுச் சூழலை பார்க்கும் வண்ணம் அமைத்தல் மிக அவசியமாகும்.

ஒரு செங்கல் உயரத்தில் நாலா பக்கமும் சீமெந்துக் கட்டு கட்டுதல் வேண்டும். அதனைவிட உயர்த்திவிடக் கூடாது.

நன்கு காற்றோட்டமான அமைப்பாக இருக்க வேண்டும். பண்ணையின் மேற்பரப்புக்கு உறுதியான தகடுகளை பயன்படுத்தலாம். அதனுடைய கட்டுமானத்திற்கு பலமான அறுப்பு மரங்களை பயன்படுத்தலாம். தற்காலத்தில் பலர் சீமெந்து கொங்கிரீட்டு கட்டைகளை பயன்படுத்துகின்றார்கள்.

நில அமைப்பானது சீமெந்து பூசப்பட்டிருத்தல் வேண்டும். அப்போதுதான் மொத்தாக கழிவுகளை இலகுவாக துப்பரவு செய்ய முடியும்.

கொட்டகை உள்ளே உமி அல்லது மரத்தூளைக் கொட்டலாம். வாரம் ஒரு முறை துப்பரவு செய்தல் அவசியமாகும்.

பண்ணை சுகாதாரம்

பண்ணைகள் எப்போதும் சுகாதாரமான முறையில் பயன்டுத்தப்பட வேண்டும். தன்னியக்க நீர் வழங்கல் முறையை அமைப்பது சிறந்தது. நீர்க்கசிவு ஏற்பட்டால் கிருமித்தாக்கம் ஏற்பட்டு கோழிக்குஞ்சுகள் அல்லது கோழிகளை மிக இலகுவாக பாதித்துவிடும்.

எனவே எப்போதும் காற்றோட்டமான இட அமைப்பில் பண்ணைகளை அமைத்தல் மிக முக்கியமாகும்.

மேற்கூறப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு நீங்கள் உங்களது எதிர்காலப் பண்ணையை நன்கு திட்டமிடலாம். ஒருநாள் குஞ்சு பராமரிப்பு தொடர்பான தகவல்களை பின்னர் நாங்கள் வழங்குவோம்.

சில ஆலோசனைகள்

1.பெரியளவு மூலதனம் என்பதால் இருவர் சேர்ந்து முதலிடலாம்.

2.பண்ணையில் அதிகமான வேலையாட்களை வைத்து இத்தொழிலில் ஈடுபடுத்த இயலாது. சம்பளமாக கொடுக்கின்ற தொகையானது முட்டை வருமானமாகத்தான் கருதப்படுகின்றது. எனவே அதற்கு சேர்த்து திட்டமிடல் வேண்டும்.

3.பண்ணையை அமைத்து முட்டையிடும் வரை நீங்கள் உங்களுக்காக உழைப்பது நல்லது. சிறந்த அனுபவத்தை தரும். வளர்ப்ப முறைகளை கற்கலாம்.

4.அனுபவமில்லாதவர்கள் ஏற்கனுவே பண்ணைகளை சிறியளவில் செய்து கொண்டிருப்பவர்களுடன் இணைந்து பெரியளவில் செய்யலாம்.

  1. உடன்படிக்கையொன்றை சட்டரீதியாக மேற்கொண்டு முதலீட்டாளராகலாம்.
  2. உங்களிடம் இட வசதியிருப்பின் படிப்படியாக பண்ணையை ஆரம்பிக்க தேவையான விடயங்களை செய்யுங்கள். மனதளவில் கடுகளவும் நட்டப்பயமிருந்தால் கண்டிப்பாக பண்ணை ஆரம்பிக்க வேண்டாம்.

7.இந்தத் தொழில் பணத்தை விட நம்பிக்கையாளர்களுக்குத்தான் கை கொடுத்திருக்கிறது.

தகவல் :
ஒலுவில் பண்ணை
களுவாஞ்சிகுடி பண்ணை

Leave a Reply