கிரிபாவ பொலிஸ் பிரிவில் திம்பிரிபொகுர பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொது சுகாதார பரிசோதகரை (PHI) தாக்கிய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டு 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிரிபாவ பொலிஸ் பிரிவில் திம்பிரிபொகுர பிரதேசத்தில் கிரிபாவ சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பொதுச் சுகாதார பரிசோதகர் கொவிட் -19 தொற்றாளர் ஒருவர் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது வீதியில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதால் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி குறித்த பொது சுகாதார பரிசோதகர் எச்சரித்துள்ளார்.

இதனையடுத்தே சந்தேக நபர்கள் சராமாரியாக அதிகாரியினை தாக்கியுள்ளனர்.

Leave a Reply