கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL102 எனும் விமானம் மூலம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள 291 பேருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளபப்ட்டு, பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்துள்ள 4 ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You missed