மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த.ச/த பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க மேற்படி பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் 2 விசேட பரீட்சை மத்திய நிலையங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
இம்முறை பரீட்சைக்குத்தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் நிலவும் சிக்கல்கள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் இணையத்தளம் ஊடாக திருத்தங்களை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
அதற்காக பரீட்சாத்திகள் பரீட்சைத் திணைக்களத்துக்கு வரவேண்டிய அவசியம் கிடையாது. அதற்கு பதிலாக திணைக்களத்தின் இணையத்தளத்தை பார்வையிட்டு திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.