16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் பாடசாலை அதிபரை இன்று ஓபநாயக்க பொலிஸார் கைது செய்தனர்.
கடந்த 3 ஆம் திகதி பாடசாலை முடிவடைந்த பின்னர் பாடசாலைக்குள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக மாணவியின் தந்தை நேற்று காலை முறைப்பாடு அளித்ததாக ஓபநாயக்க பொலிசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர் மருத்துவ பரிசோதனைக்காக பாலங்கொட ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவி பல நாட்களாக அதிர்ச்சியால் அவதிப்படுவதைக் கவனித்த பெற்றோர் அவரைப் பற்றி விசாரித்தனர்.
அவர் தெரிவித்த தகவல்களின்படி, இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் பொலிஸ் மற்றும் வலயக் கல்வி அலுவலகத்தில்முறைப்பாடு அளித்துள்ளனர்.