வவுனியா மடுகந்த பகுதியில் ஆடுகளுக்கு குழை பறிப்பதற்காக மடுகந்த பகுதியில் உள்ள மரம் ஒன்றில் ஏறிய நிலையில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்

குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் அன்ரன் அருள்நாதன் (வயது 51) என்ற நபரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த நபரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மடுகந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply