இலங்கையில் தற்போது அதிகமான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்பான முறையில் இருக்கும் படி வளிமண்டல தினைக்களம் கேட்டுக்கொண்டது.

மேலும் நான்கு மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் உள்ளதாக அறிவித்துள்ளது.

  1. இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, கொடக்காவில, வெலிகேபொல ஆகிய பிரதேசங்கள்.
  2. களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள பிரதேசம்.
  3. கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை பிரதேசம்.
  4. மாத்தறை மாவட்டத்தில் பஸ்கொட, கொடபொல பிரதேசம்.

மேற்சொன்ன பிரதேசங்களில் நிலச்சரிவு, நில வெடிப்பு, பாறைகள் புரலுதல், நிலம் தாழிறங்கல் போன்றவை தொடர்பில் முன்னெச்சரிகையாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply