உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய நாம் மத்ரஸாக்கலை கண் கானிப்போம் அதே சந்தர்ப்பத்தில் பௌத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பினை தடை செய்ய மாட்டோம் எனகல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஆரயும் ஆணைக்குழு அறிக்கையில் பொதுபல சேனாவை தடை செய்யும் பரிந்துரைக்கு பதில் அளிக்கும் முகமாகவே ஊடக சந்திப்பொன்றில் இவ்வாறு தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை முழுவதுமாக படிக்காதவர்களே சில குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.