குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட புல்மோட்டை பட்டிக்குடா- கொக்கிளாய் இணைப்பு வீதியானது நீண்ட நாட்களாக மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பாவிக்க முடியாத நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இவ்விடயம் அவ் வட்டாரத்தின் கௌரவ உறுப்பினர் S.A.C.M.நசார் அவர்களினூடாக தவிசாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்கமைய 14.04.2020 இன்று குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இவ் வீதியானது மக்கள் பயணிக்கக் கூடிய வகையில் புனரமைப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அவ் வட்டாரத்தின் கௌரவ உறுப்பினர் S.A.C.M.நஸார் அவர்களும் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply