இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் அவர்களினால் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இது இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் ஆகும்.
நாணயம் 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 05 மில்லியன் நாணயங்கள் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி முதல் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.02.24