கறுவா அபிவிருத்தித் திணைக்களம் எனும் பெயரில் புதிய திணைக்கள மொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தை புதிதாக தாபிக்கப்பட்டுள்ள கறுவா திணைக்களத்திற்கு ஒப்படைத்தல் பொருத்தமானது என கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் அனைத்து சொத்துக்கள் மற்றும் தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்துப் பணிகளையும் கறுவா அபிவிருத்தித் திணைக்களத்திற்கு ஒப்படைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

விவசாய மற்றும் பெருந்தோட்டத் துறை அமைச்சர் சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply