யாழ்ப்பாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையில் உள்ள தனியார் காணிகள் தொடர்பிலான தகவல்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

முப்படையினர் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் காரணமாக மீள குடியமர முடியாத குடும்பங்களின் விபரங்கள் மற்றும் பலாலி விமான விஸ்தரிப்பினால் சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களின் விபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவங்களை செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply