இரண்டு நாட்களுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை இலங்கை வருகிறார்.
மேலும் பாகிஸ்தானின் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமருடன் வருகின்றனர்.
இந்த விஜயத்தின் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு அபிவிருத்தி மற்றும் வர்த்தக முதலீடுகள் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வி மற்றும் விவசாயம் மற்றும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், பாதுகாப்பு மற்றும் கலாசார சுற்றுலா உள்ளிட்டவிடயங்களை மையப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.