பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நேற்றும், இன்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் T20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி நடக்க இருந்தது. இந்த போட்டி ரசிகர்கள் இன்றி நடைபெறும் என்று முதலில் அறிவித்தது பாகிஸ்தான் சூப்பர் லீக் அமைப்பு. ஆனால் தற்போது இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் சூப்பர் லீக் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. இந்த போட்டிக்கான மாற்று திகதி குறித்த விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.