இலங்கையில் அசாதாரண நிலைமை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் ஆரம்பமாகி 2 கிழமைக்கு பின்னர் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பில் இடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இச்சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.