க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மாணவர்களுக்கான ‘சிசு செரிய’ பஸ் சேவையை நடைமுறைப்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்திருப்பதாக தெரிவிப்பு.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு மார்ச் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி வரை மேற்படி பஸ் சேவைகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்திருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிலான் மிரிண்டா தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் அனைத்து சிசு செரிய பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவேண்டும் என்றும் குறித்த பஸ்களில் பிற பயணிகளை ஏற்றிச்செல்வது முற்றிலும் தடை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவைப்படின் சுகாதார நடைமுறைக்கேற்ப் மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாத்திரம் செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டார்.
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அவசியம் சுகாதார நடைமுறையை பேண வேண்டும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.