திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 45,000 தொன் நெல் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் இன்று (7) கந்தளாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது 3 நெல் களஞ்சியசாலைகளில் இருந்து 45,000 தொன் நெல்மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவைகள் கைப்பற்றப்பட்டு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் திருகோணமலை பணிப்பாளர் கே.டி வசந்தன் தெரிவித்தார்.
சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர். பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் கே.டி வசந்தன் தெரிவித்தார்.