வெளிநாட்டில் இருந்து தாய்நாட்டுக்கு (இலங்கைக்கு) வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்து பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது.

இதற்கமைய பதிவு செய்தவர்கள் பரிசோதனை செய்யப்பட்டார்கள். பதிவு செய்யாதவர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னாள் பதிவு செய்து கொள்ளலாம்.

அதையும் மீறி பதிவு செய்யாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Leave a Reply