பசறை பிரதேசத்தில் இடம்பெற்ற தனியார் பயணிகள் பஸ் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் தற்சமயம் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற வீதியில் ,வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா என்பது குறித்து இந்த குழு முதலில் ஆராயவுள்ளது.
பெருந்தெருக்கள் அமைச்சியால் இந்த மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது..
இந்த பஸ் விபத்து தொடர்பாக ரிப்பர் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான இவர் நேற்றிரவு பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, விபத்துக்குள்ளான பஸ் சாரதி பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் பஸ்ஸை செலுத்தும் போது, மதுபானம் அருந்தியிருந்தாரா என்பது தொடர்பான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
விபத்தில் பலியான 14 பேரின் மரண பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Government news