நேற்று மாலை டில்லி சுற்றிய பகுதிகளான நொய்டா, குர்கான், காசியாபாத், பரிதாபாத், கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.1 அலகுகளாகப் பதிவாகி உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீட்டில் இருந்து அனேகமான நபர்கள் பயத்தால் வெளியே வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.