நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் இன்று இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கெக்கிராவ பகுதியை சேர்ந்த அஸீஸ் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
ஹோட்டல் உரிமையாளரின் சகோதரர் ரிஸ்வான் மற்றும் பணியாளர் ஜிப்ரி ஆகிய இருவரும் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேனில் வந்து தகராறில் ஈடுபட்டவர்கள் வெட்டிக் கொலை செய்தபின்னர் வேனுடன் தப்பிச் சென்றுள்ளனர்.