கௌரவ அலி ஷப்ரி MP,
நீதி அமைச்சர்,
இலங்கை சனநாயக சோசலிச குடியரசு,
கொழும்பு.

ஐயா

முஸ்லிம் தனியார் சட்டங்களின் ஒரு அங்கமான முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்போவதாக கூறிக்கொண்டு முன்னெடுக்கப்படும் அத்தனை கைங்கரியங்களும் சர்வதேச, உள்நாட்டு இஸ்லாமாபோபியாவின் நிகழ்ச்சி நிரலோடு தொடர்புடையது என்பதை புரியாத பாலகனாக நீங்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

கிட்டத்தட்ட முஸ்லிம் விவாக,விவாகரத்து சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்கும் காரியத்தை உங்கள் உதவியுடனே அழகாக செய்துகொண்டு இருக்கின்றார்கள் என்று கூறுவதை உங்களால் மறுக்க முடியாது.

காதிமன்றங்களில் சில பல தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பதற்காக தொன்றுதொட்டு வழக்கத்திலிருந்த ஒரு முறைமையை முற்றாக இல்லாதொழிப்பது நியாயமாகுமா?
அல்லது தவறுகளை நிபர்த்திப்பது சிறப்பாகுமா?

ஒரு சில நீதிபதிகள் தவறு செயதார்கள் என்பதற்காக நீதிமன்றஙகளை இடித்து நொறுக்குவதற்கும்,
ஒரு சில மதகுருக்கள் தவறு செய்தார்கள் என்பதற்காக வணக்கஸ்தலங்களை இடித்து நொறுக்கவதற்கும் சமனனான முட்டாள்தனத்துக்கும் காதிக்கோடு முறைமையை முற்றாக இல்லாமலாக்குவதற்குமான வித்தியாசத்தை உங்களால் கூறமுடியுமா?

18வயதுக்கு குறைந்த பெண்கள் திருமணத்துக்கான பக்குவமற்றவர்கள் என்ற நவீன வாதத்ததையும், கூடிய வயது வித்தியாசமுள்ளோர் குறைவயது பெண்களை திருமணம் முடித்து குதூகலிக்கின்றார்கள் என்ற உதிரியான குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் இன்னொரு நியாமான கேள்விக்கும் உங்களிடமிருந்து தர்க்க ரீதியான பதிலை எதிர்பார்க்கின்றேன்.

பெற்றோரை இழந்த அல்லது வாழ்வாதார வழிமுறைகள் ஏதுமற்ற, சிரமப்படும் 18 வயதுக்கு குறைந்த பெண்பிள்ளைகளயாவது கூடிய வயது வித்தியாசமில்லாத ஆண்களால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற விஷேட ஏறபாடுகள் ஏதாயினும் பொது சட்டத்தில் உள்வாங்கப்படுமா ?
அல்லது வாழ்வாதாரத்துக்காக தம் இளமையை விற்று சம்பாதிக்கும் கேவலமான தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்படுவாரகளா?

இது முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமேயான பிரத்தியேகமான விடையமல்ல அமைச்சர் அவர்களே!
அனைவருக்குமானது.

அடுத்து,
பலதார திருமணத்தை இல்லாதொழிப்பது இலங்கை போன்ற மேற்க்கத்தேய கேடுகெட்ட சட்டங்களை உள்ளடக்கிய நாட்டில் சாத்தியமாகுமா?

Consent affair, Living together போன்ற மேற்க்கத்தேய உடலுறவுகளை குற்றமாக கருதாத சட்டத்தால் எப்படி பலதார திருமணத்தை தடுக்க முடியும்?

மஹரும் இரு சாட்சிகளும் இருந்தால் திருமணம் செல்லுபடியாகிவிடும்.
உங்ஙள் பதிவுச்சான்றிதழ் அவர்களுக்கு தேவைப்படாது அல்லவா அமைச்சர் அவர்களே?

Consent affair, Living together போன்றவைக்கு தடையில்லாத நாட்டில் எந்த சட்டத்தின் கீழ் அவர்களை குற்றம் சாட்டுவீரகள்?

வாரிசு உரிமை சட்டத்தின் பிரகாரம் பலதாரத்தினூடாக பிறக்கும் வாரிசுகளுக்கு சொத்துரிமையற்று போனாலும் உயிலூடாக யாருக்கும் யாரும் சொத்துப்பங்கீடு செய்யலாம் என்ற பொதுச்சட்டத்தை என்ன செய்ய போகின்றீரகள் கௌரவ அமைச்சர் அவர்களே?

பலதார திருமணத்தையோ 18வயதுக்கு கீழபட்டோரின் திருமணத்தையோ நான் தனிப்பட்ட முறையில் ஆதரிப்பவனல்ல.

ஆனால் இஸ்லாம் அனுமதித்துள்ளதால் அஙகீகரிப்பவன்.

ஆனால், உங்களது கேடுகெட்ட அரசின் இனவாத முன்னெடுப்புக்கள் இலங்கையையும் அதன் மக்களையும் எங்கு கொண்டு செல்கின்றது என்பதை சுட்டிக்காட்டுவதே எனது நோக்கமாகும்.

நன்றி

வஃபா பாறுக்

Leave a Reply