தன் அன்பு மனைவியின் ஆசைக்காக, இருக்கும் நிலத்தையே விற்று யானை ஒன்றை வாங்கியுள்ளார் ஒரு வங்கதேச விவசாயி.
இவர் வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர பாய். இவரின் மனைவி பெயர் துளசி ராணி தசி. பொருளாதார ரீதியாக சாதாரண மனிதராக இருந்தாலும், மனைவியின் மீது வித்தியாசமாக அன்பு வைத்திருப்பவர் துலால்.
தன் மனைவியின் கனவில் ஏதேனும் மிருகம் அல்லது பறவை வந்துவிட்டால், உடனே அவற்றை விலைகொடுத்து வாங்கிவிடுவார். இதனடிப்படையில், ஏற்கனவே அன்னம், குதிரை மற்றும் ஆடு போன்றவைகளை வாங்கியுள்ளார்.
இந்நிலையில், அவரது மனைவியினுடைய கனவில் யானை வந்துள்ளது. இதனை அறிந்த துலால், தன்னிடமிருந்த 2 பிகா அளவுள்ள நிலத்தை விற்று 16.5 லட்சம் டாகா செலவில் ஒரு யானையை வாங்கியுள்ளார்.
மவுல்லி பஜாருக்கு சென்று வாங்கிய யானையை ஏற்றி கொண்டுவர, டிரக்கிற்கு மட்டும் 20,000 டாக்கா செலவு செய்துள்ளார் இந்த துலால். அத்துடன் யானையை பராமரிக்க ஒரு யானைப் பாகனையும் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துள்ளார். யானையை உள்ளூர் மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
யானையைக் கட்டி எப்படி தீனிப்போடுவாரோ தெரியவில்லை..!