“மாலா கேக்குறேன்ல என்னாச்சு சொல் ஏ இப்படி சைலன்டாவே இருக்க? வீட்ல ஏதும் பிரச்சினையா? அல்லது யாராவது ஏதும் சொன்னாங்களா?சொல்லு மாலா” என்று மாலினி மாலாவிடம் கெஞ்சி கேட்டாள்.
சொல்றே கொஞ்சம் இரு என்றவள் என் கனவுகளெல்லா வீணா போயிடுச்சு நா ஏதோ ஒன்னு நெனச்சிருந்தே ஆனா இப்போ ஏதோ நக்குது.”என்ன மலா சொல்ற எனக்கு ஒன்னுமே புரியல” என்றாள் மாலினி “ஆமான்டி எங்க அப்பா என்ன ஒரு மத போதகரா உருவாக்கனுமாம்னு ஆசப்பர்ராரா என்ன என்ன செய்ற அவங்கட ஆசைக்கு என்னால மறுப்பு தெரிவிக்க ஏலா நானு ஆமென்டு சொல்லிட்டேன்டி” என்று தனக்கு நடந்தவற்றை கண்ணீர் மல்க கூறி முடித்தாள் மாலா.

அட இதுதா மேட்டரா? இதுக்கு போய் சும்மா மனச போட்டு குழப்பிட்டு அழுதுட்டிருக்கியே இதெலா ஒரு மேட்டரே கிடையாது” என்றாள் மாலினி.
என்னடி லூசு மாதிரி பேசுர?ஆமான்டி நா சொல்றத கவனமா கேழ் OK.
நீ நல்ல கெட்டிக்காரி என்னப் பொருத்தவரைக்கும் உன்னால ரெண்டு கல்வியையும் கற்க முடியும்னு நா சொல்ற மாலா எதயு கஷ்டம்னு நெனச்சா அது கஷ்டம்தா எல்லாமே லேசுதான்னு நெனச்சுப் பார எதுவுமே கஷ்டமா தோனாது என்று மாலாவுக்கு தைரியமூட்டினாள் மாலினி.
ஆமாடி நீ சொல்றது சரிதா இருந்தாலு எது எப்படி நடக்கும்னு நமக்குத் தெரியாதுல கடவுள் மேல நம்பிக்க வெச்சிட்டு போயிட்டே இருப்போ எது நடந்தாலும் OKதா.
என்னடி இப்படி நம்பிக்கையில்லாம பேசுற?என்றாள் மாலினி ஆமாடி இப்போ சொல்வாங்க இதப் படின்னு அதுவு கொஞ்ச நாள் போகும் போது மாப்பிள பாக்கனு கல்யாணம் முடிக்கனும்னு கன்டிப்பா சொல்வாங்கடி என்ன செய்ற எல்லாமே நம்ம தலவிதின்னு ஏற்றுக் கொண்டு ஆமென்டு தலையாட்டி பொம்மையா மாற வேண்டியதுதா.
அட சும்மா போடி மனச போட்டு குழப்பிக்காத நீ நல்லா படி அப்புறமா என்ன நடக்குதுன்னு பாப்போமே என்றாள் மாலினி.
நாட்கள் வேகமாக நகர்ந்தன மாலாவும் ஒன்பதாம் தரத்திற்கு சித்தி எய்தினாள். அவளது பெற்றோரும் அவளை அறநெறிப் பாடசாலை ஒன்றில் சேர்ப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்தனர்.
மாலா ஒன்பதாம் தரத்தின் இறுதிப் பரீட்சை முடிந்தவுடன் மாலாவை அறநெறி பாடசாலையில் சேர்க்கலாம்னு முடிவு செய்திருக்கோம்னு அவளின் வகுப்பாசிரியரிடம் மாலாவின் பெற்றோர் பேசிக்கொண்டதற்கு இன்னு ஒரு வருசத்துல அவ O/L எடுத்துருவாதான அப்ப சேர்க்கலாமே என்றார் ஆசிரியர். இல்ல சேர் பொம்புல புள்ளதான சேர் வயசு போயிட்டிருக்கு அதா பாக்கிறோ என்றார் மாலாவின் தந்தை.
ஆமாங்க ஒரு வருசந்தான பொறுத்துப் பாக்க சொல்ற அதுக்குப் பிறகு சேர்க்கலாமே இல்ல சேர் பணமெல்லா கட்டிட்டோ சேக்கிற மட்டுந்தா சேர் அவ அங்க சேர்ந்த பிறகு O/L எடுக்கட்டுமே என்றார் மாலாவின் தந்தை.
மாலாவின் வகுப்பாசிரியர் எவ்வளவோ சொல்லியும் அதைக் கேட்க மறுத்துவிட்டார் மலாவின் தந்தை.
அவர்கள் ஏற்பாடு செய்தது போல் அவளது இறுதியாண்டுப் பரீட்சையும் முடிந்தவுடன் அவளது வகுப்புத் தோழிகளிடமிருந்து விடைபெற்றாள் மாலா….. தொடரும்

By Admin

Leave a Reply