பெற்றோரைப் பிரிந்த மாலா செய்வதறியாது திகைத்து நின்றாள். அவளுக்கென ஆறுதல் சொல்லக் கூட யாருமில்லையென நினைத்து வேதனை அடைந்தாள். கவலையின் காரணமாக சரியான முறையில் உணவு, தூக்கமின்றி பரிதவித்தாள்.
நல்ல முறையில் படித்துக் கொண்டிருந்த மாலா பெற்றோரின் பிரிவை அடுத்து படிப்பிலும் கொஞ்சம் தளர்ந்து போனாள்.
பரீட்சையில் பெறுபேறுகள் குறைவடைகின்ற போதெல்லாம் அவளின் அப்பா அவளிடம் அடிக்கடி கேட்க்கின்ற ஒரு வினா மாத்திரம் அவளது உள்ளத்தைக் கிழித்துக் கொண்டு செல்லும். “மாலா! என்னப்பா சொல்லுங்கப்பா “என் கடக்குட்டி செல்லம் நீதானம்மா?” ஆமாப்பா ஏ அப்பா கேக்கிறீங்க? அம்மாடி நீ வளர்ந்து பெரியவளாகி நல்லா படிச்சி கை நிறைய சம்பாதிச்சி அப்பாவ காப்பாத்துவல்லம்மா?
ஆமாப்பா நீ ஒன்னு கவலப் படாதப்பா நா வளர்ந்து பெரியவளாகி நல்லாப் படிச்சி லோயராகி கை நிறைய சம்பாதிச்சி உன்ன நல்லா கவனிச்சிக்குவப்பா”
இவ்வாறு அப்பா கூறியதும் அவள் அப்பாவுக்கு வாக்களித்ததுவும் அடிக்கடி அவளது உள்ளத்தில் தோண்றி மறைந்தது.
“நாம நல்லா படிச்சாதான அப்பாக்கு கொடுத்த வாக்க காப்பாத்த முடியும்”என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்.
பெற்றோரின் பிரிவுக்குப் பின்னால் தனது அம்மம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தாள். இப்படியே ஒரு வருடம் உருண்டோடியது. மீண்டும் நல்ல முறையில் படிக்க ஆரம்பித்து நல்ல பெறுபேறுகளையும் பெற்றுக் கொண்டிக் கொண்டிருக்கையில் திடீரென அப்பா தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது “மாலா! என்னப்பா என்றவளுக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருப்பதை சற்றும் அறிந்திருக்கவில்லை. அம்மாடி அப்பா ஒன்னு சொல்லுவே கோவிக்க மாட்டால்ல? என்னப்பா கேள்வியிது எப்பதாப்பா நீங்க சொல்றத கேக்காம கோவிச்சிட்டிருந்திருக்கே. கோவிக்க மாட்டப்பா எதுவாருந்தாலும் பரவாயில்ல சொல்லுங்கப்பா” என்றாள்.
“அம்மா மாலா அப்பாக்கு கன நாளா ஒரு ஆசம்மா உன்ன ஒரு மதகுருவா மாத்தனும்னு” என்னம்மா சொல்ற என்றவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் சில நிமிடங்கள் மௌனமானாள்.
என்னம்மா மாலா சத்தத்தையே காணோ என்றதற்கு இல்லப்பா ஒன்னுமில்லப்பா நீங்க சொல்றத நா கேட்டுத்தானப்பா ஆகனு எதுவா இருந்தாலும் உங்க விருப்பத்த நானு சம்மதிக்கிறேப்பா என்றாள்.
அவளை அறியாமா கண்களிலிந்து நீர் தாரைதாரையாகக் கொட்டியது. அவளது லோயராகும் கனவு அந்த நிமிடமே தவிடு பொடியானது. வெந்தழலிலே வெந்த புலுவாய் துடித்தாள். மறுநாள் பாடசாலைக்கு சென்றவளைப் பார்த்து அவளது நண்பி மாலினி “என்ன மாலா ஒரு மாதிரி இருக்க?கண்ணெல்லா சிவந்திருக்கு என்னாச்சு? சொல்லு மாலா. என்னாசுனு கேக்கிறேன்ல என்று மாலாவைப் பிடித்து உசுப்பினாள் மாலினி……. தொடரும்