கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோது என் இறப்பை அறிவிக்க டாக்டர்கள் திட்டத்தை தயார் செய்து வைத்திருந்தனர் என பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

போரீஸ் ஜான்சன், கடந்த மார்ச் மாதம், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின்னர், மீண்டு வந்தார்.

Covid 19 பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நாட்கள் குறித்து ஊடகத்திற்கு போரீஸ் ஜான்சன் அளித்துள்ள பேட்டி:- நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கடினமான தருணம் நான் அதை அப்போது நான் அவ்வளவு சுயநினைவுடன் இல்லை, ஆனால் என்னைக் காப்பாற்ற ஆரம்ப கட்ட சிகிச்சை திட்டங்கள் மட்டுமே டாக்டர்களிடம் இருந்தது. அவர்கள் லீட்டர்க்கணக்கில் ஆக்சிஜன் ஏற்றினர்.

என் சுவாசம் செயல்படும் தன்மை படிப்படியாக குறைந்தது. அந்த நேரத்தில் நான் இறந்துவிட்டால் அதை எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்ற திட்டத்தையும் டாக்டர்கள் தயார் செய்து வைத்திருந்தனர். இந்த நிலையிலிருந்து எப்படி வெளியேறப்போகிறேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஒரு சில நாளில் என் உடல்நிலை இன்னும் மோசமடைந்ததால், இனி பிழைக்கப்போவதில்லை என நினைத்தேன். எதனால் உடல் இவ்வளவு மோசமானது.

டாக்டர்களும், தாதிகளும்,மிகவும் கடுமையாகப் போராடி என் உயிரை காப்பாற்றினர். அவர்களின் அற்புதமான செயலால்தான் நான் மீண்டுவந்தேன் எனவே அவர்களுக்கு எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பேன் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply