இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் 21நாட்கள் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மங்களூர் பகுதியில் கொரோனா வைரஸ் காரணமாக அங்குள்ள அடுக்கு மாடி (Apartment) குடியிருப்பில் வெளியாட்கள் யாரும் உள்நுழையக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு தங்கியிருக்கும் ஒரு மாணவன் தனது நண்பனை மக்களுக்கு சந்தேகம் வராத வகையில் ஒரு சூட்கேஸ் பொட்டியில் வைத்து இழுத்துக் கொண்டு அந்த அபார்ட்மெண்ட்கு வந்தார்.
ஆனால் துரதிஷ்டவசமாக அந்த அந்த பொட்டி அசைந்ததை கண்டு மக்கள் சந்தேகத்தின் பேரில் அந்த பொட்டியை திறக்கும் படி கூறினார்கள். சூட்கேசை திறந்த போது மாணவன் வெளியே வந்தார்.
இருவரையும் மக்கள் பொலிஸில் ஒப்படைத்தார்கள்.