உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்த தோப்பூரின் #2வது பெண் சட்டத்தரணி செல்வி முகமட் அலி சிபா பர்வீன்


இவர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக உயர் நீதிமன்றத்தில் 2023.12.07 ஆந் திகதி வியாழக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

தோப்பூரின் இரண்டாவது பெண் சட்டத்தரணியான இவர் தனது கல்வியினை #தோப்பூர் பாத்திமா முஸ்லீம் மகளீர் கல்லூரியில் பயின்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்திற்குத் தெரிவாகினார். இவர் அங்கு #ஆங்கில மொழி மூலத்தில் சட்டமாணி பட்டப்படிப்பினில் சிறப்பு சித்தி பெற்று சிறப்புச் சட்டமாணிப் பட்டத்தையும் [LLB(Hons)] பெற்றுக்கொண்டார்.

சட்டக் கல்லூரியினால் நடாத்தப்படும் , சட்டத்தரணிகளுக்கான இறுதிப் பரீட்சையிலும் தோற்றி சித்தியடைந்துள்ள இவர் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.மிகக் குறைந்த வயதில் சட்டத்தரணியான இவர்

காலஞ் சென்ற முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தர் கபீபு முகமட் முகமட் அலி மற்றும் சித்தி நயீமா முகமட் அலி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியுமாவார்.

இவரின் மூத்த சகோதரியான முகமட் அலி பாத்திமா மன்சிபா என்பவர் தோப்பூரின் #முதலாவது பெண் சட்டத்தரணி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முகமட் அலி சிபா பர்வீன்

By Admin

Leave a Reply