உலகின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸின் காரணமாக மக்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் தென்னாப்ரிக்காவில் உணவுக்காக பல பேர்கள் வரிசையில் நிற்கும் காட்சியை ட்ரோன் வீடியோ மூலம் காட்டியுள்ளது ‘ராய்ட்டர்’ செய்தி நிறுவனம்.
ஊரடங்கு சட்டத்தால் வேலைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் உணவுக்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்குப் பல தொண்டு நிறுவனங்கள் அன்றாடம் உணவளித்தும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பைகளையும் கொடுத்துவருகின்றது. இவற்றை வாங்குவதற்காக நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்வதைக் காட்டுகிறது.