தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் இடம்பெற்றுள்ளது.
தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பட்டியலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது..
நாட்டில் 60 வீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த எண்ணிக்கை 69 வீதமாக உள்ளது. நேபாளத்தில் 53 வீதமானோரும், பாகிஸ்தானில் 51 வீதமானோரும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள். தென்னாசியாவில் குறைந்தளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் உள்ளது. அங்கு 41 வீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள். (Government news)